Sustain Humanity


Tuesday, July 21, 2015

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதி அதிரடி அறிவிப்பு BY KAVI SIVA

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதி அதிரடி அறிவிப்பு
BY KAVI SIVA
சென்னை: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார். வழக்கத்துக்கு மாறாக திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கையை இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வாசித்து வெளியிட்டார். மதுவிலக்கு தொடர்பான கருணாநிதி அறிக்கை: தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

No comments:

Post a Comment